திருமணத்தை மீறிய உறவு..! பேராசிரியரை கடத்திய கும்பல்! 

Relationship beyond marriage ..! The gang that kidnapped the professor!

திருச்சி மாவட்டம், கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த பேராசிரியர் விமல் என்பவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பணியாற்றிவருகிறார். இவர், அதே கல்லூரியில் பணிபுரியும் பெண்ணுடன் பழகிவந்துள்ளார். விமல், அப்பெண்ணுக்கு வரன் தேடி சசிகுமார் என்பவைரை நிச்சயித்து திருமணம் செய்து வைத்துள்ளார்.

ஆனால், அதன்பிறகும் அப்பெண்ணுக்கும்பேராசியர் விமலுக்கும் தொடர்பு இருந்துவந்துள்ளது. இந்தத் தொடர்பு சசிகுமாருக்கு தெரியவரவே, விமலை கடத்தி அவரது வீட்டில் ரூ. 2 லட்சம் கேட்டுள்ளார். அதனை அவர் வீட்டாரும் தந்துள்ளதாக தெரிகிறது. ஆனால், அதன்பிறகும் சசிகுமார் விடாமல் மேலும் பணம் கேட்டு விமலை தாக்கியுள்ளார். அதனால், அவரது மனைவி ரூ. 40,000 மற்றும் தனது வீட்டு பத்திரத்தைக் கொண்டுசென்று கொடுத்து விமலை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட விமலுடன் அவரது வீட்டார், செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்திற்குச் சென்று சசிகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் புகாரைப் பதிவுசெய்த காவல்துறையினர், இது தொடர்பாக சசிகுமார், அவரது தம்பி பிரசாந்த், லாசர் ஆரோக்கியராஜ் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

trichy
இதையும் படியுங்கள்
Subscribe