வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தென் சென்னை மாவட்ட தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலய திருக்குளத்தில் ஒத்திகை பயிற்சி நடத்தினர்.
வீட்டில் எளிதாக கிடைக்கக் கூடிய பொருட்களை வைத்து வெள்ளத்தில் இருந்து எப்படி மீண்டு வருவது என்பது குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை எப்படி மீட்டு அவர்களுக்கு எவ்வாறு முதலுதவி அளிக்க வேண்டும் எனவும் பயிற்சி அளிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்களின் பயிற்சிகளை நூற்றூக்கும் மேற்ப்பட்ட பொதுமக்களும் பள்ளி மாணவ மாணவிகளும் கண்டனர்.