/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_1188.jpg)
திண்டுக்கல்லில் கமலா நேரு மருத்துவமனை, பூச்சிநாயக்கன்பட்டி, மரியநாதபுரம், பழனி சாலை முருக பவனம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான முன்பதிவு செய்யப்படுகிறது.
இது சம்பந்தமாக திண்டுக்கல் மாநகர நகர்நல அலுவலர் லசஷ் யவர்ண கூறும்போது, “கரோனா தடுப்பூசிபோட விருப்பமுள்ளவர்கள் ஆதார் கார்டு எண் மற்றும் தொலைபேசி எண்ணைக் கொடுத்துப் பதிவுசெய்தால், சுகாதாரத் துறையினரே அவர்களைத் தொடர்புகொள்வார்கள். அதைப்போல, தனியார் தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள், சங்கங்கள் உள்ளிட்டவை அந்தந்த பகுதிகளில் தங்கள் சொந்தப் பொறுப்பில் தடுப்பூசி முகாம் அமைக்க ஏற்பாடு செய்திருந்தால், எத்தனை பேர் என்ற விவரத்தையும் அவர்களது பெயர், தொலைபேசி எண், ஆதார் கார்டு எண் ஆகியவற்றையும் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள நகர்நல அலுவலரிடம் நேரடியாகவோ அல்லது அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ கொடுத்துவிட்டால், அரசு எப்போது தடுப்பூசி ஒதுக்கீடு செய்கிறதோ அந்த நேரத்தில் முகாம் அமைத்து தேவையான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)