ADVERTISEMENT

ஒரு லட்சம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கிய சார்பதிவாளர்

03:26 PM Dec 01, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் காட்டூர் பாப்பா குறிச்சியில் வசித்து வருபவர் சுப்பிரமணியன் மகன் அசோக்குமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் திருவெறும்பூர் வட்டம் பாப்பா குறிச்சியில் 21 சென்ட் விவசாய நிலத்தை வாங்க முடிவு செய்துள்ளார் . இந்நிலையில் திருவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் மேற்படி நிலத்தை பத்திர பதிவு செய்ய அணுகியுள்ளார் அசோக்குமார்.

அப்போது, தான் வாங்கவிருக்கும் விவசாய நிலத்திற்கு சந்தை மதிப்பாக ரூபாய் ஒரு லட்சம் நிர்ணயம் செய்து பத்திர பதிவு செய்ய திருவெறும்பூர் சார் பதிவாளர் பாஸ்கரனை அணுகியுள்ளார். அதற்கு சார்பதிவாளர் பாஸ்கரன் நிலத்தினை அரசு மதிப்பீட்டின்படி சதுர அடி மதிப்பில் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.

மேலும் விவசாய நிலமாக 47 (A) படி பத்திரம் பதிவு செய்ய வேண்டுமானால் தனக்கு ஒரு லட்ச ரூபாய் லஞ்சமாக கொடுத்தால்தான் விவசாய நிலமாக பதிவு செய்ய இயலும் என்றும் கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அசோக்குமார் திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி மணிகண்டனிடம் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அளித்த ஆலோசனையின் பேரில் இன்று சார்பதிவாளர் பாஸ்கரன் அசோக்குமாரிடமிருந்து ஒரு லட்ச ரூபாய் லஞ்ச பணத்தை பெற்றபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT