Advertisment

ஆட்சியைவிட்டு ஓடு.. மாணவர்கள் சாலை மறியல்

ஆட்சியைவிட்டு ஓடு.. மாணவர்கள் சாலை மறியல்



மாணவி அனிதாவின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. மாணவர்கள் தொடங்கி அரசியல் கட்சிகள் இளைஞர்கள், பொதுமக்கள் என்று போராட்டங்களை நடத்திவருகின்றனர். எல்லா இடங்களிலும்போராட்டத்தில் கேட்கும் ஒரே முழக்கம் ரத்து செய் ரத்து செய் நீட் தேர்வை ரத்து செய்!ரத்து செய்ய வக்கில்லை என்றால் ஓடிவிடு..!என்ற முழக்கங்களே எதிரொலிக்கிறது.
Advertisment



இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தெத்துவாசல்பட்டி கிராமத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் புதுகை - தஞ்சை சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாணவர் அமைப்புகள் இளைஞர் அமைப்புகளும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Advertisment

இரா.பகத்சிங்

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe