ADVERTISEMENT

டெங்கு நோய் கட்டுப்படுத்துதல் குறித்து  ஆலின் சுனேஜா தலைமையில் ஆய்வு கூட்டம்!

06:21 PM Nov 03, 2018 | sakthivel.m

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சின்னாளபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சியின் இணை இயக்குநர்(பொது) ஆலின் சுனேஜா தலைமையில் டெங்கு நோய் கட்டுப்படுத்துதல் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மற்றும் 23 செயல் அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். டெங்கு ஒழிப்பு மஸ்தூர் பணியாளர்களை முறையாக கண்காணித்து டெங்குவை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்த ஆலின் சுனேஜா பேரூராட்சிக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் பொது திறவை இடங்கள் குறித்து தமிழ்நிலம் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டுகோள் விடுத்தார்.

ADVERTISEMENT

அதன்பின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் டெங்குவை கட்டுபடுத்தவும், டெங்கு ஒழிப்பு குறித்து ஆய்வு செய்யவும் மற்றும் ஸ்வைன் ப்ளு எனப்படும் பன்றிக்காய்ச்சலை முற்றிலும் தடுக்க பேரூராட்சிகளின் இணை இயக்குநர் (பொது) வி.ஆலின் சுனேஜா திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் கடந்த இரண்டு நாட்களாக பண்ணைக்காடு, வத்தலக்குண்டு, ஆயக்குடி பேரூராட்சி பகுதிகளில் ஆய்வு செய்துவிட்டு இன்று சின்னாளபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஆலின் சுனேஜா தலைமையில் செயல் அலுவலர்களுடன் டெங்கு நோய் ஒழிப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய ஆலின் சுனேஜாவோ... திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் டெங்கு நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பேரூராட்சி செயல் அலுவலர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக செயல் அலுவலர்கள் தினசரி டெங்கு ஒழிப்பு பணிகளில் ஈடுபடும் மஸ்தூர் பணியாளர்களை முறையாக கண்காணித்தால் முற்றிலும் டெங்குவை கட்டுப்படுத்தலாம் என்றார். டெங்கு நோயை போல் ஸ்வைன் ப்ளு எனப்படும் நோயும் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த பள்ளிகளுக்கு சென்று மாணவர்கள் மத்தியில் கை, கால்களை சுத்தம் செய்ய அறிவுறுத்த வேண்டும். மேலும் பள்ளிகளில் அந்த வசதி இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலருக்கு வேண்டுகோள் விடுத்தார். பேரூராட்சிக்கு சொந்தமான பொது நிலங்கள் மற்றும் பொது திறவை இடங்கள் குறித்து தமிழ்நிலம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்த ஆலின் சுனேஜா நோய் வந்த பின்பு (டெங்கு) அந்த இடத்தை முற்றிலும் சுத்தமாக்குவதை விட முன்னதாக அசுத்தம் நிறைந்த இடங்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்தாலே டெங்கு மற்றும் ஸ்வைன் ப்ளு நோய்களை கட்டுப்படுத்தலாம் அதோடு பொதுமக்களின் சுகாதாரத்தில் பேரூராட்சி நிர்வாகம் அக்கறையோடு செயல்படுவதால் தினசரி அவர்களின் வீட்டிலிருக்கும் குப்பைகளை வீட்டிற்கு சென்று பெறுவதோடு வடிகாலையும்(சாக்கடை) சுத்தம் செய்கிறது. இதனால் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த பணியை தொடர்ந்து தவறாமல்; பேரூராட்சி பணியாளர்கள் செய்கிறார்களா என்பதை செயல் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்று கூறினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ரகுருராஜன், உதவி இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர் வைரசெல்வம், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் நத்தம் பெ.கணேசன், அய்யம்பாளையம் ஆ.சரவணக்குமார், சின்னாளபட்டி மு.விஜயநாத், வத்தலக்குண்டு சி.கமர்தீன், ஆயக்குடி பேரூராட்சி செயல் அலுவலர் மு.கோட்டைச்சாமி, வேடசந்தூர் இரா.கோபிநாத், பாளையம் பெ.செல்வராஜ், அம்மையநாயக்கனூர் மத்தியாஸ், பாலசமுத்திரம் நா.பாலசுப்பிரமணி, நெய்க்காரபட்டி அ.சகாயஅந்தோணி யூஜின், தாடிக்கொம்பு எம்.சுதர்சன், அகரம் செ.ரவிசங்கர், அய்யலூர் முகமது யூசுப், கீரனூர் வை.பால்ராஜ், ஸ்ரீராமபுரம் க.உமாசுந்தரி, சேவுகம்பட்டி சக்திவேல், எரியோடு ம. ராஜசேகர், சித்தையன்கோட்டை ஆ.சரவணக்குமார்(பொறுப்பு), கன்னிவாடி மு.விஜயநாத் (பொறுப்பு), பட்டிவீரன்பட்டி செயல் அலுவலர் பி.பாலமுருகன் மற்றும் உதவி பொறியாளர்கள் வேலுச்சாமி, ஜெயகிருஷ்ணன், பன்னீர், வெற்றிச்செல்வி, சந்தோஷ், சுரேஷ், பேரூராட்சிகளின் துப்புரவு ஆய்வாளர்கள் நத்தம் சடகோபு, வத்தலக்குண்டு கணேசன், நிலக்கோட்டை ஜெயலட்சுமி, ஆயக்குடி சரவணபாண்டியன், சின்னாளபட்டி செல்வி.சித்ராமேரி, பணி மேற்பார்வையாளர்கள் ஆனந்த், கணேஷ், நாகராஜ், பக்கிரி மற்றும் சின்னாளபட்டி பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர்கள் தங்கதுரை, சரவணன், அகிலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT