குமாி மாவட்டத்தில் ஞறான்விளை, கோழிவிளை, பெருமாள்புரம், பழவிளை ஆகிய 4 இடங்களில் அகதிகள் முகாம் உள்ளது. இங்கு சுமாா் 400 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறாா்கள். இதில் பெருமாள்புரம் மற்றும் பழவிளை முகாமை சோ்ந்த மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கேட்டு கலெக்டா் உட்பட அதிகாாிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

Advertisment

refugee camp... two families in one house...

இதனால் அவா்கள் ஒவ்வொரு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகளிடமும் தங்களின் கோாிக்கைகளுக்கு நியாயம் கேட்க மனு கொடுத்தனா். இதில் உாிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினா் பழவிளை அகதிகள் முகாமில் சென்று பாா்வையிட்டனா். அப்போது ஆஸ்பெட்டாஸ் சீட்டுகள் கொண்ட வீடுகளில் சீட்டுகள் உடைந்து உள்ளதால் தற்போதைய பருவமழையால் வீடுகளில் மழைவெள்ளம் ஒழுகிறது.

refugee camp... two families in one house...

Advertisment

அதேபோல் அங்குள்ள கழிவறைகள் இடிந்து கிடப்பதால் அவா்கள் இயற்கை உபாதைகள் கழிப்பதற்கு அவதிப்படுகின்றனா். மேலும் குடிநீா் என்பது 20 நாட்களுக்கு ஒருமுறைவருகிறது. 75 குடும்பங்களுக்கு 54 வீடுகள் மட்டுமே உள்ளது. இதனால் ஒரு வீட்டுக்குள் இரண்டு குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இது அவா்களின் சுதந்திரத்தை பறிக்கும் நிலையில் உள்ளது.

இந்த நிலையை கண்டித்து தலித் உாிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினா் முகாமில் போராட்டத்தில் ஈடுபட்டனா். இது வருவாய் அதிகாாிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் அரசியல் கட்சியினரும் அந்த முகாமில் படையெடுக்கவுள்ளனா்.