மாமல்லபுரத்தில் சர்வதேச 44வதுசெஸ்ஒலிம்பியாட்போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்பொழுது நான்காம் சுற்று ஆட்டங்கள் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு நாளும் மூன்று மணிக்குசெஸ்போட்டியானது தொடங்கி நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று தொடங்கி நடைபெற்றசெஸ்போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்தஹெர்னாண்டஸ்ரோமிஎன்ற பெண்நடுவராகபங்குகொண்டிருந்தார். அப்பொழுது வெயிலின் தாக்கம் காரணமாக திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கு இருந்த அவசர ஊர்தியில் அவரை மருத்துவ முகாமிற்கு அழைத்துச் சென்றனர். தற்போது அவர் மருத்துவமனையில் நலமாகஉள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளது.