மாநகராட்சி குப்பை கிடங்கிற்குதீ வைத்து அதன் முன்னால்சுகாதார ஆய்வாளர் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருபவர் விவேக். அண்மையில் உதயநிதி நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தைபார்த்த விவேக் அதில் கதை நாயகன் மளமளவென பற்றி எரியும்தீயிக்கு முன் மாஸாக நடந்துவரும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதேபோல்தானும்வீடியோ எடுக்க வேண்டும் என ஆசைப்பட்ட சுகாதார ஆய்வாளர்விவேக் திருப்பத்தூர் பாவுசபகுதிக்கு சென்று அங்கு திடக்கழிவு மேலாண்மைக்காககுப்பைகளை சேகரித்து வைத்திருந்த குப்பை கிடங்கிற்கு அவரது உதவியாளரின்உதவியுடன் தீ வைத்ததாககூறப்படுகிறது.
பின்னர் பற்றி எரியும்நெருப்புக்குமுன் மாஸாக நடந்துவருவது, கண்ணாடி அணிந்து கொள்வது போன்ற வீடியோக்களைஎடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில்வெளியான நிலையில் வைரலானது. இந்நிலையில் குப்பை கிடங்கிற்கு தீவைக்கஉதவி புரிந்தநகராட்சி ஊழியர் ஒருவரை பணியிடைநீக்கம்செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இந்தநிலையில் குற்றச்சாட்டுக்குஉள்ளான சுகாதார ஆய்வாளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள விவேக், எரிந்துகொண்டிருக்கும் குப்பையை பார்க்கச்சென்றபொழுது எனக்கே தெரியாமல் யாரோ வீடியோ எடுத்தபரப்பிவிட்டனர் எனத் தெரிவித்துள்ளார்.