
கோவை துடியலூர் அடுத்த பன்னிமடை பகுதியை சேர்ந்த 1ஆம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமி கடந்த 2019 ஆம்ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது காணாமல் போனார். அடுத்த நாளான 2019 ஆம்ஆண்டுமார்ச் 26 ஆம் தேதி வீட்டின் எதிரே உள்ள வீட்டின் பின்புறத்தில் இருந்து துணியால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக சிறுமி கண்டெடுக்கப்பட்டார்.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கோவையில் பல இடங்களில் போராட்டமும் நடைபெற்றது.
பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுமி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, மூச்சுத்திணறடிக்கப்பட்டு கொலை செய்தது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக துடியலூர் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்த விசாரணையில் சிறுமியின் வீட்டிற்கு எதிரே மனைவியை பிரிந்து பாட்டி வீட்டில் வசித்து வந்த தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை 2019 ஆம்ஆண்டு 31 ஆம் தேதி கைது செய்தனர். அப்பொழுது தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் சந்தோஷ் குமாருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.

இந்நிலையில் மரண தண்டனையை உறுதி செய்வதற்கான வழக்கிலும், சந்தோஷ்குமாரின் மேல் முறையீட்டுவழக்கிலும்,போக்சோ, கொலை குற்றச்சாட்டுகளைசந்தேகத்திற்கு இடமின்றி போலீசார் நிரூபித்துள்ளதாகதெரிவித்த உயர்நீதிமன்றம், அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரணதண்டனை விதிக்கவேண்டும்என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதாகவும், சிறுமியின் குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உத்தரவு செல்லும் என உத்தரவிட்டு குற்றவாளியான சந்தோஷ் குமாருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)