கச்சா எண்ணெய் விலை உயர்வால் அதிகரித்துக் காணப்பட்டபெட்ரோல், டீசல்மற்றும் சமையல் எரிவாயுவின் விலை தற்போது குறைந்துள்ளது. கடந்த மே மாதம் 19ம் தேதிக்குப் பின் வணிகப் பயன்பாட்டிற்கானசிலிண்டர்விலை தொடர்ந்து 4வது முறையாகக் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயுசிலிண்டரின்விலை 96 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. 19 கிலோ எடையுள்ள வணிகசிலிண்டரின்விலை 2141 ரூபாயிலிருந்து 2045 ரூபாயாகக் குறைக்கப்பட்டு விற்கப்படுகிறது. வீடுகளுக்கான 14.2 கிலோ எடை கொண்டசிலிண்டரின்விலை எந்த மாற்றமும் இன்றி 1068 ரூபாய் 50 காசுக்கு விற்கப்படுகிறது.