Advertisment

முதல்வரின் பாதுகாப்பிற்கான கான்வாய் வாகனங்கள் குறைப்பு!

Reduction of convoy vehicles for the safety of the Chief minister

முதல்வருக்கானகான்வாய்வாகனங்களைக் குறைக்கமுடிவெடுக்கப்பட்டுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், காவல்டிஜிபிஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வரின்பாதுகாப்பிற்காக அவரதுகாரின்முன்னும் பின்னும் செல்லும் பாதுகாப்புக்கானகான்வாய்கார்களின்எண்ணிக்கையைக்குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

முதல்வரின் பாதுகாப்புக்காக மொத்தம் 13 அல்லது 12கார்கள்முதல்வர் பயணிக்கும்காரின்முன்புறமும், பின்புறமும் செல்லும். இதில் குண்டு துளைக்காத ஜாமர்கார், இணைய வழியிலான ஆபத்துகள் இருந்தால்துண்டிக்கத்தொழில்நுட்ப வசதி கொண்ட ஒருகார்,அட்வான்ஸ்பைலட்,அட்வான்ஸ்டிசிஉள்ளிட்டகார்கள்இடம்பெறும். அதேபோல் டி.எஸ்.பி அந்தஸ்தில் உள்ள அதிகாரி முதல்வரின்காருக்குமுன்னதாகசென்றுஅங்குசரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாஎனக்கண்காணிப்பார்.

இன்று நடைபெற்றஆலோசனைக்கூட்டத்தில்,முதல்வரின்பாதுகாப்பிற்காக இயங்கும் இந்தகான்வாய்வாகனங்களின்எண்ணிக்கையைக்குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 6 முதல் 7கான்வாய்வாகனங்களே இடம்பெறும். போக்குவரத்து நெரிசல், முதல்வர்வருகைக்காகப்பொதுமக்களின்வாகனங்களை நிறுத்துவது உள்ளிட்ட காரணங்களால் இந்த முடிவுஎடுக்கப்பட்டுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.

stalin TNGovernment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe