Advertisment

அத்தியாவசிய பொருள் வாங்குவதற்கான நேரம் குறைப்பு... ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு!

இந்தியா முழுவதும் மார்ச் 24 ந்தேதி முதல் 21 நாள் ஊரடங்கு என பிரதமர் மோடி அறிவித்தார். தமிழகத்திலும் அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு தொடங்கிய முதல் 3 நாள் கடுமையாக இந்த ஊரடங்கை காவல்துறை கடைப்பிடித்தது. இதனால் 90 சதவித மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.

Advertisment

அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்ததன் விளைவாக ஊரடங்கு உத்தரவை தளர்த்த தொடங்கினார்கள். இதனால் ஊரடங்கை கடைபிடிக்காமல் 10 சதவித இளைஞர்கள் சுற்றிக்கொண்டு இருந்தார்கள் என்றால் ஊரடங்கை தளர்த்தியதன் விளைவாக அது 20 சதவிதமாக உயர்ந்தது. தற்போது அது 40 சதவிதமாக உயர்ந்துள்ளது.

Advertisment

Reduce time to purchase essential items ... Curfew extended opportunity!

தமிழகம் முழுவதும்மே தினமும் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை காய்கறி வாங்க, அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரலாம் என்றதால் 40 சதவித மக்கள் சர்வசாதாரணமாக வீட்டை விட்டு வெளியே வருகின்றர். திருவண்ணாமலை மாவட்டத்தில் நகரப்பகுதி,பேரூராட்சி மன்றும் அதனை ஓட்டிய கிராமபுற மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வாரத்தில் 4 நாட்கள் வெளியே வர அடையாள அட்டை தரப்பட்டது. பொதுமக்களுக்கு இது இன்னும் சாதகமாகி, இதேப்பார் அடையாள அட்டையோடு தான் வெளியே வருகிறேன் எனச்சொல்லி 40 சதவித்துக்கும் மேற்பட்ட மக்கள் தினமும் மார்க்கெட் செல்கிறேன், மளிகை கடைக்கு செல்கிறேன் என வெளியே வருகிறார்கள்.

நகரப்பகுதிகளில் வசிக்கும் பலர் தினமும் காய்கறி மார்க்கெட்டுக்கு வருகிறார்கள். 30 சதவித்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரு மஞ்சள் பை கொண்டு வந்து அன்றைய தேவைக்கு மட்டும் காய்கறிகளை வாங்கி செல்கிறார்கள். அவர்கள் எல்லாம்மே நன்றாக படித்தவர்கள், நல்ல வேளையில் இருப்பவர்களாக இருக்கிறார்கள் என்கிறார்கள் மார்க்கெட் பகுதிகளில் சேவையாற்றும் தன்னார்வலர்கள். அப்படி வராதீர்கள் என பலமுறை மைக்கில் சொன்னாலும் அவர்கள் கேட்கமாட்டேன் என்கிறார்கள் என்றார்கள். இதனால் திருவண்ணாமலை நகரம், ஆரணி, வந்தவாசி, செய்யார், போளுர், சேத்பட், செங்கம் போன்ற நகரம் மற்றும் பேரூராட்சிகளில் காலை முதல் மதியம் வரை இருசக்கர வாகனங்கள் சர்சர்ரென பயணமாகின்றன. அதிகளவு கூட்டம் நகரப்பகுதிகளில் உள்ளன.

Reduce time to purchase essential items ... Curfew extended opportunity!

ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்த காவல்துறையின் கைகளை ஆட்சியாளர்கள் கட்டிப்போட்டதால் பாதுகாப்பு பணியில் ஈடுப்படும் காவல்துறையினர், எதையும் கண்டுக்கொள்ளாமல் உள்ளனர். இந்த தமிழகம் முழுவதும்மே உள்ளது.

இதனால் தலைமை செயலாளரிடம் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, இறைச்சி, மளிகை சாமான் வாங்கும் நேரத்தை குறைக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தங்களது கருத்துக்களை கூறிவருகின்றனர். காலை 6 மணி முதல் 11 மணி வரை மட்டும்மே காய்கறி வாங்கவும், இறைச்சி வாங்கவும், மளிகை பொருட்கள் வாங்கவும் வரலாம். 11 மணிக்கு மேல் மருத்து பொருள் வாங்கவும், மருத்துவரை பார்க்க மட்டும்மே அனுமதியளிக்கலாம் எனக்கூறியுள்ளனர். அதுப்பற்றி முதல்வரிடம் ஆலோசனை நடத்தியபின் தகவல் கூறுகிறேன் என தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளாராம்.

தற்போது கரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மக்கள் வெளியே வருவதை இன்னும் சில தினங்களுக்கு 100 சதவிதம் தடுக்க வேண்டும், அப்போதுதான் குறையும். தற்போது போலவே ஊரடங்கு தளர்வு இருந்தால் காரணம்மே இல்லாமல் வெளியே சுற்றுபவர்கள், விபரீதம் புரியாமல் மார்க்கெட் பகுதிகளுக்கு வருபவர்களால் கொரோனா அதிகமாக பரவும் அபாயம் உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிச்சாமி, அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் நேரம் மதியம் 1 வரை மட்டும்மே என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை கேட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவர்கள் இதுவே அதிகம், இன்னும் குறைக்க வேண்டும் என்கின்றனர்.

ஊரடங்கு நாள் இன்னும் நீட்டிப்பது தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடப்பதாக கூறப்படுகிறது. அப்படி நீட்டிக்கப்படும்போது பொதுமக்கள் வெளியே வரும் நேரம் இன்னும் குறைக்க வாய்ப்புள்ளது என்கின்றனர்.

Tamilnadu govt corona virus curfew
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe