Advertisment

‘மால டம் டம்.. மங்கள டம் டம்…’- சின்னத்திரை நடிகையை கரம்பிடித்த ரெடின் கிங்ஸ்லி

Redin Kingsley is married to serial actress Sangeetha

'கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமான ரெடின் கிங்ஸி 'டாக்டர்' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். வசன உச்சரிப்பு, வித்தியாசமான உடல் மொழி என தனது நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்த ரெடின் கிங்ஸ்லி ரஜினியின் அண்ணாத்த, ஜெய்லர், விஜய்யின்பீஸ்ட், சிம்புவின் பத்து தல, விஷாலின் மார்க் ஆண்டனி என பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடத்து தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு ரசிகர்கள் கூட்டத்தைவைத்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில், காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கும், சின்னத்திரை நடிகை சங்கீதாவுக்கும் இன்று எளிமையாக திருமணம் நடைபெற்றுள்ளது. சீரியல் நடிகையான இவர் வீட்ல விசேஷங்க, பாரிஸ் ஜெயராஜ்உள்ளிட்ட திரைப்படங்களிலும்நடித்துள்ளார். இவரும் ரெடின் கிங்ஸ்லியும்நீண்ட காலமாக காதலித்து வந்ததாகவும், இன்று இருவரும் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

தற்பொது இவர்களது திருமணப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில்வெளியான நிலையில், ரசிகர்கள் பலரும் திருமண வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

tamilcinema Sangeetha
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe