Red soil smuggling; Three arrested

கன்னியாகுமரியில் சட்டவிரோதமாக செம்மண் அள்ளிய சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு பகுதியில் விவசாய நிலத்தையொட்டி சட்டவிரோதமாக செம்மண் வெட்டி லாரிகளில் எடுத்துச் செல்லப்படுவதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக இரணியல் காவல் நிலையத்திற்கு புகார் சென்றது.

Advertisment

புகாரை அடுத்து இரணியல் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்த பொழுது இரண்டு மினி லாரிகளில் செம்மண் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டது தெரிந்து. உடனடியாக செம்மண் கடத்தலில் ஈடுபட்ட விக்டர், மணிகண்டன், ராஜேஷ் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.