'Red Alert' Withdrawal-Predictions False?

Advertisment

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்தது. வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (27.11.2024) மாலைக்குள் புயலாக மாறும் எனக் கணிக்கப்பட்டது. இதற்கு ஃபெங்கல்என பெயரிடப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை காரணமாக நேற்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட இந்நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நாளையும் (28/11/2024) புதுவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு கனமழை எச்சரிக்கை காரணமாக விடுமுறை அறிவிக்கப்படுவதாக புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

காற்றழுத்த மண்டலத்தின் நகர்வு வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி இல்லாததால் கணிப்புகள் பொய்யானதா என்று கேள்விகள் இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு விடப்பட்ட ரெட் அலெர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வாபஸ் பெற்றுள்ளது. கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஏற்கனவே ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் தற்போது ரெட் அலர்ட் எச்சரிக்கையை வாபஸ் பெற்றுள்ளது வானிலை ஆய்வு மையம்.

Advertisment

அதே நேரம் புயல் வலுப்பெற இன்னும் 12 மணி நேரம் ஆகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் தாமதமாகி வரும் நிலையில் மணிக்கு மூன்று கிலோ மீட்டர் வேகத்தில் மெதுவாக நகர்கிறது. சென்னையில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள தாழ்வு மண்டலம் புதுவையில் இருந்து 420 கிலோமீட்டர் தொலைவிலும்,நாகையில் இருந்து 320 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. நவம்பர் 30ஆம் தேதி புயல் வலுவிழுந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.