Red Alert warning; Notice of holiday issued

Advertisment

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தொடர்ந்துடெல்டாமாவட்டங்களில் நாளை அதிக கனமழைக்கானரெட்அலர்ட்எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை மறுநாள்ரெட்அலர்ட்எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.டெல்டாவைசேர்ந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள் கனமழை எச்சரிக்கைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் அதி கனமழை காரணமாக நாகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை அடுத்து நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.