Advertisment

தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Red Alert for Tamil Nadu ... Meteorological Center Warning!

வரும் 10ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும், 11ஆம் தேதி கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, புதுவை ஆகிய பகுதிகளிலும் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டிற்கு 'ரெட் அலர்ட்' விடப்பட்டுள்ளது.

Advertisment

Red Alert for Tamil Nadu ... Meteorological Center Warning!

தமிழ்நாட்டில் பரவலாகத் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில், நேற்று (08.11.2021) பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, விருதுநகர், ராமநாதபுரம்ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில், தமிழ்நாட்டில் அதீத கனமழை பொழியும் என்பதால் நாளையும், நாளை மறுநாளும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

Tamilnadu red alert
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe