Red alert for Kanyakumari ... Rain for 5 days in Tamil Nadu!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மாவட்டத்திற்கு 'ரெட் அலர்ட்'விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

கன்னியாகுமரியில் சரல்விளை, சண்முகபுரம், முஞ்சிறை, செண்பகராமன்புதூர், சென்னித்தோட்டம், குழித்துறை, லாயவிளக்கு, பேயன்குழி, தடிக்காரன்கோணம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாளை குமரி மாவட்டத்திற்கு முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்ய இருக்கிறார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இன்று அதிகனமழை பெய்யக்கூடும் எனச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்குக் கனமழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மத்திய அந்தமான் பகுதியில் நிலவுவதால் தமிழகத்திற்கு மழை வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.