Advertisment

மலை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்- தொட்டபெட்டா செல்ல தடை

Red alert for hill district - travel ban on Doddapet

Advertisment

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக கனமழை பொழிந்து வருகிறது. அந்த வகையில், சென்னை உள்பட தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் கனமழை பொழிந்தது. இத்தகைய சூழலில் தான் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், “தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் காலை 10:00 மணி வரை இடியுடன் மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கோவை மற்றும் நீலகிரியில் அதி கனமழைகானரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. ஊட்டி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு தலா ஒரு பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். கண்காணிப்பு பணியை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு செல்ல அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திலோ அல்லது அந்தந்த மாவட்டங்களில் உள்ள கட்டுப்பாட்டு மையங்களுக்கோ பேரிடர் தொடர்பான புகார்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரிக்கு ரெட் லைட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பை கருதி நாளை நீலகிரியின் பிரதான சுற்றுலாத்தலமான தொட்டபெட்டா, பைன் பாரஸ்ட் பகுதிகளுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Forest Department doddabetta ooty nilgiris
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe