கல்குவாரியில் சிக்கிய ஆறாவது நபரின் உடல் எட்டு நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.
நெல்லை மாவட்டம், அடைமிதிப்பான்குளம் அருகே உள்ள கல்குவாரியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய ஆறு தொழிலாளர்களில் இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மூன்று பேரின் உடல்கள் மட்டுமே கிடைத்தன. செல்வகுமார் என்பவரின் உடல் பிரேதபரிசோதனைக்குபிறகு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், தமிழநாடு அரசு அறிவித்த ரூபாய் 15 லட்சம் நிதியுதவியும், அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், எஞ்சிய ஒருவரின் உடல் இருக்கும் இடம் அடையாளம் காணப்பட்ட நிலையில், கற்குவியலுக்குக் கீழே லாரியில் சிக்கியிருந்த ராஜேந்திரனின் உடலை மீட்புக் குழுவினர் மீட்டனர். பின்னர், பிரேதபரிசோதனைக்காக அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, எட்டு நாட்களாக நீடித்த மீட்புப்பணி நிறைவு பெற்றது.