Skip to main content

மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி சடலமாக மீட்பு

Published on 30/03/2022 | Edited on 30/03/2022

 

Recovery corpse mentally ill old lady

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் உள்ள ஆவணிப்பூரை சேர்ந்தவர் அப்பாவு. இவரது மனைவி மல்லிகா(65). இருபது ஆண்டுகளுக்கு முன்பு மல்லிகாவின் கணவர் அப்பாவு இறந்து போனார். அதன்பின் தனது மூன்று சகோதரர்களுடன் மல்லிகா அதே ஊரில் வசித்து வந்துள்ளார். சில ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்ட மல்லிகா அப்பகுதியிலேயே சுற்றித்திரிந்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் நேற்று(29.3.2022) காலை ஊருக்கு அருகில் உள்ள விவசாய நிலத்தில் மல்லிகா உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். வயல் பகுதிக்கு வேலைக்குச் சென்றவர்கள் மல்லிகாவின் சடலத்தைப் பார்த்து அவரது உறவினர்களுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து வளத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மல்லிகாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மல்லிகாவின் சடலம் அருகே தூங்கிக் கொண்டிருந்த ஒரு இளைஞரை பிடித்து விசாரித்தனர். அவர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த சிறு நகரி என்ற ஊரைச் சேர்ந்த பார்த்திபன்(37) என்பது தெரியவந்தது.

 

தனது சொந்த வேலையாக திண்டிவனம் வந்த பார்த்திபன் டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்தியுள்ளார். அப்போது மனநிலை பாதித்த மல்லிகா பார்த்திபனிடம் இருந்து மது வாங்கி குடித்துள்ளார். மது குடித்த பார்த்திபன் போதையில் அதே இடத்தில் படுத்து தூங்கி விட்டதாக கூறுகிறார். ஆனால் மல்லிகாவின் உறவினர்கள் மதுபோதையில் பார்த்திபன் மல்லிகாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் பார்த்திபனுக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

 

இது குறித்து வழக்குப்பதிவு செய்த வளத்தி போலீசார் மல்லிகாவின் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனநிலை பாதித்தவர் சடலமாக மீட்கப்பட்டது அவரது அருகில் ஒரு இளைஞர் போதையில் படுத்து இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி; முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
Boy incident by electrocution Chief Minister MK Stalin obituary

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பெலாகுப்பம் ரோடு பாரதிதாசன் பேட்டை பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் தேவேந்திரன் என்பவர், அப்பகுதியில் உள்ள அரசு சின்டெக்ஸ் டேங்கில் தண்ணீர் பிடிப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது சிறுவன் தேவேந்திரன் அங்குள்ள மோட்டாரின் சுவிட்ச்சை ஆன் செய்ததாக கூறப்படுகிறது. அச்சமயம் தேவேந்திரன் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதனைப் பார்த்த அவருடைய தந்தை மகனை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிறுவன் தேவேந்திரன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதே சமயம் போர்வெல் சுவிட்ச் ஷாக் அடிப்பதால் மரக் குச்சியை வைத்து பயன்படுத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், பலமுறை இதை மாற்றக் கோரியும் நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் தற்போது இந்த உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது என அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தனர்.

மேலும் போர்வெல் மோட்டார் சுவிட்சை இயக்கிய 10 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் உயிரிழந்த சிறுவன் தேவேந்திரன் குடும்பத்திற்கு தனது இரங்கலை தெரிவித்து ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

Next Story

பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் சி.வி.சண்முகம் திடீர் சந்திப்பு! 

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
CV Shanmugam sudden meeting with pmk founder Ramadoss

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்தவகையில் கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்காக பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் கடந்த 1 ஆம் தேதி (01.02.2024) நடைபெற்றது. இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பாமக கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது. மாநில நலன் மற்றும் தேசிய நலனில் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும், அதுகுறித்து முடிவு செய்ய பாமக நிறுவனர் ராமதாஸுகு அதிகாரம் வழங்கியும் பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில், “நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்டால் கூட குறைந்தது 7 இடங்களில் பாமக வெற்றி பெற்றாக வேண்டும். ஆனால் தொண்டர்கள் அனைவரின் விருப்பப்படி தனித்து போட்டியிட இப்பொழுது பாமக தயாராக இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி. திடீரென சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது. நேற்று (05.02.2024) இரவு 7 மணியளவில் ராமதாஸ் வீட்டுக்கு சென்ற சி.வி. சண்முகம் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து இருவரும் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சந்திப்பானது சுமார் 35 நிமிடங்கள் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது அதிமுக கூட்டணியில் 10 மக்களவைத் தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு ஆரணி, சிதம்பரம், கடலூர், தருமபுரி உள்ளிட்ட 6 மக்களவைத் தொகுதிகளை பாமகவுக்கு ஒதுக்கீடு செய்ய அதிமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.