/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/,.m.jpg)
சென்னை முத்தியால் பேட்டை மலையப்பன் தெரு பகுதியில் வசித்து வந்த ஜமால் என்பவர் வீட்டில் கடந்த 13ஆம் தேதி என்.ஐ.ஏ அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு கோவை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாகச் சோதனை நடத்த வந்துள்ளதாகக் கூறி 6 பேர் சோதனையிட்டுள்ளார்கள். அப்பொழுது வீட்டிலிருந்து பல லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டனர். இது குறித்து முந்தியால்பேட்டை காவல் நிலையத்தில் ஜமால் மற்றும் அவரது சகோதரர்கள் புகாரளித்தனர். இதனையடுத்து மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இதில் முக்கியக் குற்றவாளியான பாஜகவைச் சேர்ந்த வேலு என்கின்ற வேங்கை அமரன் உள்ளிட்ட சிலர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சரணடைந்த அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர்கள் கொள்ளையடித்துச் சென்ற 1.5 கோடி ரூபாய் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.பிடிபட்ட இவர்கள் ஆறு பேரும் குதிரைப் பந்தயத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் என்பதும், நஷ்டம் அடைந்ததால் பாஜகவைச் சேர்ந்த வேலு திட்டத்தின் படி ஜமாலிடம் அதிகமாகப் பணம் இருப்பதைத் தெரிந்து கொண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்திருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)