Advertisment

உதகையில் ‘0.8’ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு!

Record temperature of '0.8' degrees Celsius in ooty

நீலகிரி மாவட்டம் உதகையில் ‘0.8’ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Advertisment

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு சில வாரங்களாக அதிகாலையில் பனியின் தாக்கமானது அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் உறை பனிசூழ்ந்து காணப்படுகிறது. மேலும் வெப்பநிலையின் அளவு 2 டிகிரி செல்சியஸை ஒட்டியே உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

Advertisment

இந்நிலையில், இன்று (29.01.2024) உதகையில் 0.8 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. உதகையில் பகல் நேர வெப்ப நிலை அதிகரித்து வரும் நிலையில், இரவில் உறைபனியாக உள்ளது. முன்னதாக கடந்த 24 ஆம் தேதி நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் ‘0’ டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், தலைகுந்தாவில் ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், உதகை தாவரவியல் பூங்காவில் 2.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

nilgiris ooty weather winter
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe