Reception at the door of the jail with drums... Police again case against BJP

கோவை மத்திய சிறையில் இருந்து வெளியே வந்த பாஜகவினரை மேளதாளத்துடன் வரவேற்ற பாஜகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisment

அண்மையில் திமுக எம்.பி ஆ.ராசாபேசியிருந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல இடங்களில் பாஜகவினர் போராட்டங்களை நடத்தினர். அதன்படி கோவையில் பாஜக பிரமுகரானபாலாஜி உத்தம ராமசாமி என்பவர் பெரியார் குறித்தும், திமுக எம்.பி ஆ.ராசா குறித்தும்அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டார். அவருடைய கைதைஎதிர்த்து போராட்டம் நடத்திய பாஜகவினர் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பாலாஜி உத்தம ராமசாமி ஜாமீனில் வெளியே வந்தார். அதனைத்தொடர்ந்து பாஜகவினர் 11 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இந்நிலையில் சிறையில் இருந்து வந்த பாஜகவினரைகோவை மத்திய சிறையின் வாசலிலேயேமேளதாளத்துடன்வரவேற்க பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் போலீசாரின்தடையை மீறி மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் பாஜகவினருக்கும், காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் போலீசாரின்உத்தரவை மீறியபாஜகவின் பாலாஜி உத்தம ராமசாமி உட்பட 7 பேர்மீது இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisment