Advertisment

மாட்டு வண்டியில் வரவேற்பு; பொங்கல் விழாவில் கலந்துகொண்ட எடப்பாடி

Reception by bullock cart; Edappadi attended the Pongal festival

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் இன்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டியுள்ளது.

Advertisment

இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அதிமுகவின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் திண்டமங்கலம் கிராமத்தில் அதிமுக சார்பில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். மாட்டு வண்டியில் அவரை அமர வைத்து நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு அழைத்து வரப்பட்டு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர் கோவில் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 108 பொங்கல் பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது.

Advertisment
admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe