ADVERTISEMENT

''மேம்பாலம் இடிந்துவிழ இதுவே காரணம்''-அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி! 

07:49 PM Aug 28, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மதுரை நத்தம் சாலையில் மதுரை-செட்டிகுளம் இடையே 7.3 கிலோமீட்டர் தொலைவில், 694 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை ஒரு தூணில் இருந்து மற்றொரு தூணுக்கு இணைக்கும் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளாகியது.

இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் சிக்கி காயமடைந்துள்ளனர் என்ற முதற்கட்ட தகவல் வெளியாகியிருந்த நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியது. உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ஆகாஷ் சிங் (45) என்ற தொழிலாளி உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீயணைப்புத்துறை படையினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் என மொத்தம் 40க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதனையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் நேரில் ஆய்வு செய்தார். அதேபோல் மாநகர காவல்துறை துணை ஆணையர் தங்கதுரை, தல்லாகுளம் உதவி ஆணையர் சுரக்குமார் ஆகியோரும் நேரில் பார்வையிட்டனர். கட்டப்பட்டுவந்த மேம்பாலம் இடிந்துவிழுந்த சம்பவம் அங்கு பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இந்த மேம்பால விபத்துக்கு காரணம் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். விபத்து நடந்த பகுதியில் தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''உரிய பயிற்சி அளிக்கப்படாமல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டது ஆய்வில் தெரியவந்துள்ளது. பணியில் பயன்படுத்திய இயந்திரங்களை முறையாக ஆய்வு செய்யாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது. பாலம் கட்டும் ஒப்பந்ததாரரிடம் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி மூலம் விசாரணை நடத்தப்படும். மேம்பால பணியை தொடர்ந்து மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியர் முடிவு செய்வார்'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT