giri

திருவண்ணாமலை கிரிவலம் புகழ்பெற்றது. ஒவ்வொரு பௌர்ணமியன்று இரவும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் 14 கி.மீ சுற்றளவுள்ள மலையை வலம் வருவார்கள். இந்த மாதத்துக்கான பௌர்ணமியாக 27ந்தேதி இரவு கிரிவலம் வந்தால் உகந்தது என அறிவிக்கப்பட்டது.

Advertisment

27ந்தேதி வெள்ளிக்கிழமை, 28, 29 என இரண்டு தினங்கள் விடுமுறை நாட்கள் என்பதால் கூட்டம் இன்னும் அதிகரிக்கும் என நினைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்நிலையில் வழக்கத்துக்கு மாறாக 2 லட்சம் பக்தர்கள் அளவுக்கே இந்த பௌர்ணமிக்கு கிரிவலம் வந்திருப்பார்கள் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

Advertisment

இது தொடர்பாக ஆன்மீக தரப்பினரிடம் விசாரித்தபோது, சந்திர கிரகணம் பிடிப்பதால் அந்த நேரத்தில் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் வீட்டுக்கு வெளியே இருப்பது உடலுக்கு உகந்ததல்ல என்கிற பிரச்சாரம் செய்யப்பட்டதால் பக்தர்கள் பயந்துக்கொண்டு வீட்டுக்குள்ளே இருந்துவிட நினைத்துவிட்டார்கள். இதனால் தான் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்றார்கள். கிரிவலப்பாதையில் கடைவைத்த வியாபாரிகள் கிரகணத்தால் பொதுமக்கள் அதிகளவில் வராததால் வியாபாரம் இன்றி மனம் வெறுத்துப்போயினர்.

அறிவியல் பூர்வமாக கிரகணம் பார்க்ககூடாதது என்பது தவறான தகவல் எனச்சொல்லப்பட்டு இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் சந்திர கிரகணம் வெறும் கண்களால் பார்க்கப்பட்டது, சென்னையில் பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்து சந்திர கிரகணத்தை பார்க்கவைத்தனர்.

Advertisment

கிரகணம் மட்டுமல்ல திமுக தலைவர் கலைஞர் உடல்நிலை சுகவீனமும் பக்தர்கள் கிரிவலம் வராமல் தயங்கியதற்கு காரணம் என்கின்றனர் சிலர்.