கல்வீச்சு சம்பவத்திற்கு மதுசூதனனே காரணம் என டிடிவி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisment

சென்னை ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்த வாகனங்கள் மீது கல்வீசி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆர்.கே.நகர் எம்.எம்.ஏ., டிடிவி தினகரன் தொகுதிக்குள் வர கடும் எதிர்ப்பு தெரிவித்து சிலர் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை டிடிவி ஆதரவாளர்களும் பதில் தாக்குதல் நடத்த முற்பட்டனர். இதனால் இரு தரப்புக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து, கல்வீசி தாக்கியவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். இதில் டிடிவி தினகரன் ஆதரவாளர்களுக்கும், கல்வீச்சு சம்பவத்தை தடுக்க முயன்ற போலீசார் சிலருக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் அங்குபோலீசார் குவிக்கப்பட்டுஅப்பகுதியே பகுதியேபரபரப்பானது.

Advertisment

ttv

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இந்த கல்வீச்சு கலவரம் குறித்து பேசிய டிடிவி.தினகரன், தண்டையார்பேட்டையில் நடைபெற்ற மோதலுக்கு மதுசூதனனே காரணம். அவர் தனது ஆதரவாளர்களிடம்மோதலை நடத்த சொல்லிபணம் கொடுத்து தூண்டுகிறார்.

Advertisment

ஆனால் எங்கள் ஆதரவாளர்கள் எப்போதும் சட்டத்தை மதித்து அமைதியான வழியில்நடந்துவருகின்றனர். மதுசூதனன் அமைச்சராக இருந்தபொழுது அவரது மனைவி பெயரில் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக வீடுகள் வாங்கியுள்ளார். கடந்த இடைத்தேர்தலில் சொத்து விவரங்களில் முறைகேடாக வாங்கிய வீடுகளையும் கணக்கில் காட்டியுள்ளார். இதுகுறித்து பழனி என்பவர் அவர் மீது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த காழ்புணர்ச்சியின் காரணமாக அவரது ஆதரவாளர்களைகையில் வைத்துக்கொண்டு மோதலை உருவாக்கி வருகிறார் என கூறினார்.