Advertisment

இரு சக்கர வாகனங்களில் பின்னிருக்கை பயணிக்கும் தலைக்கவசம் கட்டாயம்!

Rear seat helmet mandatory on two wheelers!

Advertisment

விபத்துக்களை குறைக்கும் விதமாக சென்னையில் வரும் திங்கள்கிழமை முதல் இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிப்போரும், தலைக்கவசம் அணிவதைக் கண்காணிக்கவிருப்பதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 1- ஆம் தேதி முதல் மே மாதம் 15- ஆம் தேதி வரை நடந்த இரு சக்கர வாகன விபத்துகளில் 98 பேர் உயிரிழந்துள்ளனர். 841 பேர் காயமடைந்துள்ளதாக கூறுகிறது போக்குவரத்து காவல்துறை. இதில் தலைக்கவசம் அணியாமல் பயணித்ததால், 80 வாகன ஓட்டிகளும், பின்னிருக்கைப் பயணிகள் 18 பேரும் இறந்ததாகக் கூறுகிறது புள்ளிவிவரங்கள்.

அதேபோல், தலைக்கவசம் அணியாததால் காயமடைந்தவர்களில் 714 பேர் வாகன ஓட்டிகளும், 124 பேர் பின்னிருக்கைப் பயணிகளுமாக இருக்கின்றன. இதையடுத்து, விபத்துகளைக் குறைக்கும் விதமாக, வரும் மே 23- ஆம் தேதி அன்று திங்கள்கிழமை முதல் சென்னையில் இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னிருக்கை நபரும், தலைக்கவசம் அணிவதைக் கண்காணிக்க சிறப்பு வாகனத் தணிக்கை நடத்த போக்குவரத்து காவல்துறைத் திட்டமிட்டுள்ளது.

police Chennai helmet
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe