Advertisment

நிஜத்தில் முதல்வரானால் நடிக்க மாட்டேன்!!;அரசியல் கேள்விக்கு பதிலளித்த விஜய்!!

சர்க்கார் திரைப்படத்தின்இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய்,இயக்குனர் முருகதாஸ், தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ்கலாநிதிமாறன்,இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisment

VIJAY

இந்தவிழாவில் நடிகர் விஜய் பேசுகையில், என்னுடைய சில படங்கள் வெற்றியடையும் பொழுது எவ்வளவு சந்தோசம் ஏற்படுமோ அதேபோல் அந்த வெற்றிக்கு காரணமான உங்களை (ரசிகர்களை) காணுவதற்கான நிகழ்ச்சிகளில் நான் தொடர்ச்சியாகபங்கேற்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. இந்த விழாவின் அடையாளம் ஏ.ஆர் ரகுமான் சார். இந்த படத்திற்கு இசையமைக்க அவர் கிடைத்தது சர்க்காருக்கு கிடைத்த ஆஸ்கார் சார். மெர்சலில் கொஞ்சம் அரசியல் இருந்தது ஆனா இதுல அரசியல்ல மெர்சல் பண்ணிருக்காரு இயக்குனர் முருகதாஸ் சார்.வெற்றிக்காக பலபேர் உழைக்கலாம் சார் ஆனா நாம வெற்றியே பெறக்கூடாது'னு ஒரு கூட்டம் உழைச்சிட்டு இருக்கு.இது யார் சொன்ன வரி என்று எனக்கு தெரியவில்லை ஆனால் இதை நான் கடைபிடித்து வருகிறேன் ''உசுப்பேத்தறவன் கிட்ட உம்முன்னு கடுப்பேத்தறவன் கிட்ட கம்ன்னும் இருந்தால் வாழ்கை ஜம்முனு இருக்குமாம் உண்மையிலேயே ஜம்முனுதான் இருக்கு.கட்சி ஆரம்பிச்சு தேர்தல் நடத்தி ஓட்டு வாங்கி சர்க்கார் அமைப்பாங்க ஆனா நாங்க சர்க்கார் அமைச்சிட்டு தேர்தல்ல நிக்கப்போறோம்.முடிஞ்சாஓட்டு போடுங்க நான் படத்தை சொன்னேன்.

Advertisment

பேசிக்கொண்டிருந்த பொழுது ஆங்கர் நடிகர் பிரசன்னா நீங்க இந்த படத்தில் முதமைச்சர் ஆக நடிக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டோம் என்றகேள்விக்கு நான் முதலமைச்சராக இந்த படத்தில் நடிக்கவில்லை என விஜய் பதிலளித்தார்.

அதன்பின் உண்மையாக முதல்வரானால்?என்றகேள்விக்கு உண்மையில் முதல்வரானால் நடிக்க மாட்டேன் என கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சி காந்தி கையில் இருந்தப்ப எவ்வளவு நல்லா இருந்தது இப்போவும் நல்லதா இருக்கு ஏன்? காந்தி கையில் இருக்கும் பொழுது மட்டும் சூப்பர் டூப்பராக இருந்தது காரணம் காந்தி அவ்வளவு பெரிய யோக்கியராம் சோ அவர பின் தொடர்ந்து வருபவர்களும் அவரை போல சாத்தியவாதியாக இருப்பார்கள். தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே எனவேஒன்னு மட்டும் உறுதிங்க தர்மம் மட்டுந்தான் ஜெயிக்கும் ஆனா என்னகொஞ்சம் லேட்டா ஜெயிக்கும். தேவை ஏற்படும் பொழுதுஅங்கஅடிமட்டத்திலிருந்து ஒருவன் வருவான் அவன் நடத்துவான் அதான் ''சர்க்கார்''.

actor AR MURUGADAS vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe