
மாடல் அழகியும், நடிகையுமான மீரா மிதுன் சில மாதங்களுக்கு முன்பு பட்டியலினத்தவர் குறித்து அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்டார். அது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மீரா மிதுன் மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக மீரா மிதுனும் அவரது நண்பர் சாம் அபிஷேக்கும் கைது செய்யப்பட்டு பின்பு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு தொடர்ந்து பலமுறை மீரா மிதுன் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். மீண்டும் கடந்த 19.10.2022 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை மீராமிதுன் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார் எனவும் அவரது குடும்பத்தினரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அடுத்த மாதம் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் தனது மகளின் செல்போன் எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் இருப்பதாகவும் தனது மகளை கண்டுபிடித்து தர வேண்டும் எனவும் மீரா மிதுனின் தாய் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)