ஆபாச படம் காட்டி மிரட்டி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ரியல் எஸ்டேட் அதிபர் மின்சாரம் பாய்ந்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஆலந்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்த ஆலந்தூர் எம்கேஎன் சாலை 2வது சந்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் முகமது சுல்தான் (40). இவர், சென்னைஅண்ணா சாலையில் எலக்ட்ரானிக் மற்றும் செல்போன் உதிரிபாகம் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். கடந்த 18-ந்தேதி முகமது சுல்தான் வீட்டில் கை, கால்களை கட்டிப்போட்ட நிலையில் கருகிய நிலையில் கிடந்தார். வீட்டில் தீ எரிந்ததால் கிண்டி ராஜ்பவன் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து கருகிய நிலையில் இருந்த முகமது சுல்தானின் உடலை கைப்பற்றினார்கள். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், சுல்தானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், கொலை செய்யப்பட்ட சுல்தானின் சொந்த ஊர் பண்ருட்டி என தெரிந்தது. திருமணம் ஆகாதவர். இவரது வீட்டுக்கு தொழில் விஷயமாக பலர் வந்து சென்றுள்ளனர். அந்த வகையில் இளம்பெண்களும் அடிக்கடி வந்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து சுல்தானின் செல்போன் நம்பரை வைத்து போலீசார் விசாரித்தனர். இதில் சந்தேகப்படும் நபர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முகமது சுல்தான் வீட்டிற்கு வீட்டு வேலைக்கு வந்துசெல்லும் பெண் ஆலந்தூர் ராஜா தெருவை சேர்ந்த ரெனியாபானு(19) என்பவரிடம் இதுதொடர்பாக விசாரித்தனர். அப்போது ரெனியாபானு திடுக்கிடும் தகவல்களை கூறினார்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
முகமது சுல்தான் வீட்டில் கடந்த ஒரு வருடமாக வேலை பார்த்து வருகிறேன். சுல்தான் என்னிடம் பலமுறை தகாத முறையில் நடந்து வந்தார். செல்போனில் ஆபாச படம் காண்பித்து அதற்கு இணங்க வற்புறுத்தினார். தொடர்ந்து அவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் இதுபற்றி எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுக்கோட்டை, கோட்டைபட்டினத்தை சேர்ந்த இமாமுதீன்(21) என்பவரிடம் கூறினேன். இதையடுத்து 2 தினங்களுக்கு முன் இமாமுதீன் ஆலந்தூர் வந்து முகமது சுல்தானிடம் இதுதொடர்பாக பேசினார். அப்போது எங்களை முகமது சுல்தான் மிரட்டினார். எங்களை அவர் வாழவிடமாட்டார் என்பதால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம்.
இதையடுத்து 18-ந்தேதி மாலை வீட்டிற்கு சென்று முகமது சுல்தானின் கை, கால்களை கட்டிப்போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு வந்துவிட்டோம் என்று ரெனியாபானு கூறினார். பரங்கிமலை போலீசார் ரெனியாபானுவை கைது செய்தனர். தப்பி ஓடிய இமாமுதீனை பிடிக்க ரெனியாபானுவுடன் தனிப்படை புதுக்கோட்டைக்கு சென்றது. ஆனால் வழியிலேயே இமாமுதீனை போலீசார் கைது செய்தனர்.
தற்போது 2 பேரையும் சென்னைக்கு தனிப்படையினர் அழைத்து வருகின்றனர். அவர்கள் சென்னை வந்ததும் முழுமையான தகவல்கள் கிடைக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.