Skip to main content

போலிஸ் அதிகாரிகளுக்கு நெருக்கமான ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் 

Published on 20/09/2018 | Edited on 20/09/2018
dhi

 

திருச்சியில் கடத்தல் என்பது சமீபகாலமாக இல்லாத ஒன்றாக இருந்தது. தற்போது திருச்சி மாநகருக்குள் கடத்தல் சம்பவம் நடந்திருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் போலிசார்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள ஒருவர் அதுவும் போலிஸ் அதிகாரி ஒருவருடன் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஒருவர் மர்மான முறையில் காணாமல் போயிருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

திருச்சி கே.கே.நகர் இந்தியன் வங்கி காலனியை சேர்ந்தவர் தனபால். இவர் ஆரம்பத்தில் வாடகைக்கு வீடு பார்த்துக்கொடுக்கும் புரோக்கராக தன் வாழ்க்கையை துவக்கியவர். தற்போது கே.கே.நகர் பகுதியில் 3 பெரிய காம்ளக்ஸ் கட்டி வாடகைக்கு மட்டும் இலட்ச கணக்கில் சம்பாதிக்கும் ரியல் எஸ்டேட் அதிபராகி கோடீஸ்வரராக வளர்ந்திருக்கிறார்.  பெரிய ரியல் எஸ்டேட் அதிபராக இருந்தாலும் எப்போதும் டூவிலரில் வலம் வருவதையே பெரும்பாலும் விரும்புவார். இரவு நேரத்தில் நண்பர்களுடன் பொழுதை போக்குவது அவருக்கு விருப்பம். 

 

நேற்று திடீர் என இரவு வரை தொடர்பில் இருந்தவர். பிறகு அவருடைய மொபைல் சுவிட்ச் ஆப் என்பதால் அவர் வீட்டில் பதட்டம் அடைந்தார்கள்.  காரணம் தனபால், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதால் சிலரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருக்கிறது. தொழிலில் போட்டி கே.கே.நகர் பக்கம் அதிகம்.

காரணம் இந்த ஏரியாவில் உள்ள சில முக்கியமான புள்ளிகளுடன் சேர்ந்து திருச்சி காவல்துறை அதிகாரிகள் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வருதும். அதன் பின்ணனியில் பல பிரச்சனைகள் நடந்திருப்பது வாடிக்கையான ஒன்று. ஆனால் இதனால் அதிர்ச்சியடைந்த தனபாலின் சகோதரர் மணி, திருச்சி கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில், இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து அவரை தேடும் படலத்தை தொடங்கினார். மேலும் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது.

 

நேற்று கவர்னர் பெரம்பலூர் வருகை இருந்ததால் போலிஸ் பாதுகாப்பு பணிக்கு சென்று இருந்தால் ஆரம்பத்தில் சற்று கவனிக்க தவறியவர்கள் தற்போது மிகவும் சுறுசுறுப்பாக விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள். 

தனபால் வழக்கமாக தினமும் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அருகே ஒரு ஓட்டல் முன்பு டூவிலரில் நிறுத்திவிட்டு, நண்பர்கள் மற்றும் சிலரை சந்தித்து விட்டு பின்னர் வீட்டுக்கு செல்வதை வழக்கமான பழக்கமாக இருப்பதால் அங்கே உள்ள வீடீயோ கேமிராவில் தனபால் டூவிலரில் வருவது போலவும், ஓட்டல் அருகே அதை நிறுத்தி விட்டு இரவு 9 மணிக்கு மேல் மோட்டார் சைக்கிளை எடுத்து செல்வது போலவும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன் பின்னரே அவர் வீடு திரும்பவில்லை என்பதும், செல்போன் ‘சுவிட்ச்ஆப்’ செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. எனவே, அவர் கடத்தப்பட்டது போலீசாரால் உறுதிப் படுத்தப்பட்டது.
தனபாலிடம் கடைசியாக திருச்சி ஏர்போர்ட் பகுதி காமராஜ் நகரில் இருந்து ஒரு பெண் இரவு 8.45 மணிக்கு பேசியிருப்பதால் ஏர்போர்ட் காமராஜ் நகரை சேர்ந்த அப்பெண்ணை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த பெண்ணோ சார்.. நா இட்லி கடை வைத்திருக்கிறேன். எனக்கு குடும்ப செலவுக்கு ஏதாவது பணம் கொடுப்பாரு அதான் கேட்டேன் சார் என்று பதறி இருக்கிறார். 

இதற்கு இடையில் திருச்சி உள்ள முக்கிய மாநகர அதிகாரியின் சம்மந்தி ஒருவருடன் சேர்ந்து கடந்த 15 வருடமாக ரியல் எஸ்டேட் வியாபரம் செய்து வருகிறார். அவருக்கு சமீபத்தில் தான் கொடுங்கல் வாங்கலில் பிரச்சனை இருந்தது என்கிறார்கள். 

 

இந்த பகுதியில் உள்ள முஸ்லீம் சொந்தமான இடங்களை எல்லாம் இவர் மூலமாக தான் விற்பனை செய்வாராம். இந்த பழக்கத்தில் தான் முஸ்லீம் பெண் ஒருவருடன் குடும்பம் நடத்துகிறார் என்கிறார்கள். 

இவ்வளவு பணம் வலிமையோடு வளர்ந்தாலும் சமீபத்தில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் நிலப்பிரச்சனைக்கு 10,00 ரூபாய் பணத்திற்கு அரிவாலுடன் சென்று மிரட்டியவரிடம் 10 இலட்சம் பணத்தை இனி தொந்தரவு பண்ணாதே என்று கையெடுத்து கும்பிடு போடும் அளவிற்கும் பயந்தும் நடந்து கொள்வாராம். 

 

இப்படி பயந்தசுபாவம் கொண்ட கோடீஸ்வரர் என்பதால் பணத்திற்காகத் தான் இதை திட்டமிட்டு கடத்தியிருக்க வேண்டும் என்கிற விசாரணையில் நடந்து கொண்டிருக்கிறது. இவர் கடைசியாக ஏ.டி.எம்.ல் இருந்து 12,000 சமயபுரம் டோல்கேட்டில் எடுத்திருக்கிறார். 

 

தனபாலின் பழக்கம் போலிஸ் அதிகாரிகள், அரசியல்வாதி, தொழில்அதிபர்கள் என பலருடன் நெருக்கம் இருப்பதால் தற்போது உயர் அதிகாரிகள் எல்லோரும் கலகத்தில் இருக்கிறார்கள். 

 

தனபால் கடத்தல் பிரச்சனையை உடனே முடிக்கவில்லை என்றால் போலிஸ் மீது சந்தேகப்பார்வை அதிகரித்துக்கொண்டே இருக்கும் என்பது மட்டும் உண்மை. தொழில் அதிபர் தனபால் கடத்தல் சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.


 

சார்ந்த செய்திகள்