Advertisment

ரஜினியுடன் இணைந்து செயல்படத் தயார் - கமல்ஹாசன் பேட்டி!

jkl

வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலுக்காக 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது முதல்கட்டப் பிரச்சாரத்தை மதுரை மற்றும் நெல்லை மண்டலங்களில் நேற்று முன்தினம் முதல் டிசம்பர் 16 வரை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

Advertisment

இதற்காக ஒவ்வொரு இடங்களுக்கும்சென்று, பரப்புரை செய்து வருகிறார். ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை அவர் சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்து வருகிறார். இதனிடையே ட்விட்டரிலும் பரப்புரைக்கு இடையிடையே கருத்துத் தெரிவித்து வருகிறார். இந்நிலையில், கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அவரின் கருத்து வருமாறு, " நானும் ரஜினியும் இன்னும் நட்பைத் தொடர்ந்துகொண்டுதான் வருகிறோம். அரசியலில் இருவரின் பயணமும் ஒன்றுதான். அவர் கொள்கையை இதுவரை அறிவிக்கவில்லை. அவர் கொள்கையைச் சொல்லட்டும். மக்களுக்கு நல்லது என்றால் நானும் அவரும் இணைந்து செயல்படுவோம்" என்றார்.

Advertisment

kamalhaasan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe