Advertisment

“ஆடு நின்று கொண்டிருக்கிறது; கத்தி தயாராக இருக்கிறது” - வைரமுத்து

“The is ready, Wake up Tamilians” - Vairamuthu

மத்திய அரசு இந்தியைத்திணிப்பதாகக் கூறிதமிழ் கூட்டமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் அறிஞர்கள், தமிழ் படைப்பாளர்கள் மற்றும் சென்னை மாவட்ட அனைத்து இலக்கிய அமைப்பாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisment

போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கவிஞர்வைரமுத்து, “தமிழ் மொழிக்கு உரிய மரியாதை அளிக்கப்படும் என கூறிவிட்டு மத்திய அரசு மீண்டும் இந்தியைத்திணிக்கிறது. தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும். கவியரசு கண்ணதாசனால் கொண்டாடப்பட்ட மொழி. இந்த மொழியை சாஸ்திரத்தால் அழிக்க முடியாது. சட்டத்தாலும் அழிக்க முடியாது. இதற்கு முன்னால் இந்தித்திணிப்பு வந்திருக்கிறது. இந்தி எதிர்ப்பு நடந்திருக்கிறது. அந்த இந்தித்திணிப்பெல்லாம் கொசு கடித்ததைப் போல அதை நசுக்குவது கண்ணுக்குதெரியும். இப்போது திணிக்கப்படும் இந்தி மொழி வேறு வடிவம் கொண்டிருக்கிறது. ஆட்டிற்குபூச்சூட்டி பொட்டு வைத்து அந்தஆட்டின் மேல் மஞ்சள் நீர் தெளிப்பது போல அந்த ஆடு நின்று கொண்டிருக்கிறது. கத்தி தயாராக இருக்கிறது. தமிழர்களே விழித்துக்கொள்ளுங்கள்” எனக் கூறினார்.

Advertisment

மேலும் “இந்தியை நுழைய விட்டால் என ஆகும்? முந்திரி இருக்கும் மூட்டையில் வண்டுகளை நுழையவிட்டால் முந்திரியை அழித்துவிடும். நேற்றுபிறந்தது இந்தி மொழி.ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த தமிழை எப்படி புறந்தள்ளுவீர்கள். இந்தி மொழி மீது எங்களுக்கு வெறுப்பு இல்லை. இந்தி மொழியை மதிக்கிறோம். அதைத்திணிக்காதீர்கள்.இந்திய ஒன்றியத்தில் தமிழ் தான் தமிழர்களின் அதிகாரம்” என்றும் பேசினார்.

hindi Vairamuthu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe