Advertisment

நிரூபித்துவிட்டால் அரசியலை விட்டு விலக தயார்- முதல்வருக்கு ஸ்டாலின் சவால்! 

Advertisment

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் உள்ள அறிவிக்கப்பட்டு பிரச்சாரக் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் நெல்லை மாவட்டம்நாங்குநேரியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

திமுக தலைவர் ஸ்டாலின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மருத குளத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் மாணவர்கள் தவிக்கின்றனர் என்றுகூறியஅவர், அம்மையார் ஜெயலலிதாமுதலமைச்சராக இருந்த நேரத்தில் அப்பொழுது நீட் தேர்வை தமிழகத்தில் திணிப்பதற்கு மத்திய அரசு ஈடுபட்டது. அப்படி ஈடுபட்டபோது அம்மையார் ஜெயலலிதா அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள் உள்ளபடியே அவரை பாராட்டியே தீர வேண்டும் என்றார்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரெடியார்புரத்தில்பேசிய ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்னுடைய கணக்கில், என்னுடைய பணம் ஸ்விஸ் வங்கியில் இருக்கு என்று நிரூபித்து விட்டீர்கள் என்றால் நீங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்ள தயார். ஆனால் அதை நிரூபிக்கவில்லை என்றால் நான் கொடுக்கின்ற தண்டனையை ஏற்றுக்கொள்ள முதல்வர் தயாரா? என்ன பெட் என்று வெளியப்படையாகசொல்கிறேன் நான் அரசியலை விட்டே விலகுகிறேன். நீங்கள் நிரூபிக்க தயாரா என்றார்.

election campaign edappadi pazhaniswamy nanguneri
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe