Advertisment

ஸ்டாலின் வழக்கு தொடுத்தால் சந்திக்க தயார்-அமைச்சர் வேலுமணி!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அதிமுக சார்பில் அண்ணாவின் 110வது பிறந்த நாள் விழா மற்றும் இலங்கை தமிழர் படுகொலைக்கு துணைபோன காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது அந்த கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அமைச்சர் தங்கமணி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்.

Advertisment

கூட்டம் தொடங்கி நடந்துகொண்டிருந்த பாதியில் மழை பொழிந்ததால் கூட்டத்திற்கு வந்த தொண்டர்கள் முடிந்த அளவு பிளாஸ்டிக் நாற்காலிகளை தலைக்கு வைத்துகொண்டு உரையை கேட்டனர். பின்னர் மழை அதிகமாக கூட்டம் கலைந்தது ஆனாலும் அமைச்சர்கள் வெறும் திடலைநோக்கி உரையாற்றி முடித்தனர்.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக இருந்த அமைச்சர் வேலுமணி மழையின் காரணமாக கூட்டம் முடியும் தருவாயிலேயே வந்தார். கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தங்கமணி காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடக்கவில்லை. ஆனால் ஸ்டாலின் பொய் கூறிவருகிறார்.இது தொடர்பாக என் மீது ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தாலும் அதனை சந்திக்க தான் தயார் எனக்கூறினார்.

stalin admk thangamani
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe