Advertisment

அன்புமணி ராமதாசுடன் விவாதத்திற்கு தயார் - சிம்பு அதிரடி

s a

சர்கார் படத்தில் விஜய் புகை பிடிப்பது போன்ற காட்சி போஸ்டருக்கு முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை விடுத்த எச்சரிக்கைக்கு பணிந்து, விஜய் புகை பிடிப்பது போன்ற போஸ்டர்களை சம்பந்தப்பட்டவர்கள் நீக்கியுள்ளனர்.

Advertisment

இந்நிலையில், இது குறித்து நடிகர் சிம்பு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ’’சினிமாவைப்பற்றி தொடர்ந்து பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கிறது. பாபா படமாகட்டும், சர்கார் படமாகட்டும். சர்கார் பட பர்ஸ் லுக்கில் தம் அடிப்பது போன்ற காட்சிகள் ஏன் என்று அன்புமணி ராமதாஸ் மூலம் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கிறது. எந்த ஒரு விவகாரம் குறித்தும் ஒரே மேடையில் விவாதம் செய்ய தயார் என்று அன்புமணியே பலமுறை சொல்லியிருக்கிறார். அப்படி ஒரு விவாதத்திற்கு அவர் தயார் என்றால் சினிமா சார்பில் விவாதம் செய்ய நான் தயார். எங்கள் தரப்பில் இருந்து சொல்ல வேண்டிய பதிலை நேரலையாக மக்களுக்கு சொல்ல தயார். எப்போது எங்கே என்று அன்புமணி சொன்னால். அவருடன் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். ’’என்று கூறியிருக்கிறார்.

Advertisment
sarkar vijay anbumani ramadoss Simbu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe