
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவருவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை மிகத்தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை தெப்பக்குளம் பகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்ட நடிகை குஷ்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போகிறேனா என்பது தெரியவில்லை. அப்படிப் போட்டியிட்டாலும் எந்த தொகுதியில் போட்டியிடுவேன் எனத் தெரியவில்லை. நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பாஜக மாநிலத் தலைவரும், டெல்லியில் இருக்கும் முன்னணித் தலைவர்களும்தான் முடிவெடுப்பார்கள். திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடுவீர்களா என என்னிடம் கேட்டார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமல்ல, தலைமை சொன்னால், யாரை எதிர்த்தும் போட்டியிடுவேன்'' என்றார்.