Advertisment

7 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது

jk

Advertisment

தமிழகத்தில் நேற்று முன்தினம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலின்போது சில இடங்களில் வாக்குப்பதிவில் குளறுபடி நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து இந்த புகார்கள் தொடர்பாக, தேர்தல் ஆணையம் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் அறிக்கை ஒன்றைக் கேட்டுப் பெற்றது. இந்தநிலையில் அந்த அறிக்கையின் அடிப்படையில், சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள 5 வார்டுகளில் 7 வாக்குச் சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறும் எனத்தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்திருந்தது.

சென்னை மாநகராட்சியில் வண்ணாரப்பேட்டையில் வார்டு எண் 51-ல் 1174-வது வாக்கு சாவடியிலும், பெசன்ட் நகர் ஓடைக்குப்பத்தில் வார்டு எண் 179-ல் 5059-வது வாக்குச்சாவடியிலும், மதுரை திருமங்கலம் நகராட்சியில் வார்டு எண் 17-ல் வாக்குச்சாவடி 17 w-விலும், அரியலூர் ஜெயங்கொண்டம் நகராட்சியில் வாக்குச்சாவடிகள் 16 m, 16 w-விலும் இன்று மறுவாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. மேலும் வாக்குப்பதிவு இயந்திரம் குளறுபடியான திருவண்ணாமலை நகராட்சியில் வார்டு எண் 25-ல் 57 m, 57 w மறுவாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைய இருக்கிறது. 5 மணி முதல் 6 மணி வரை கரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

elections
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe