jh

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த 6ம் தேதி இரவு, வேளச்சேரியில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை ஸ்கூட்டரில் தூக்கிச் சென்ற நபர்களை மடக்கிப்பிடித்த பொதுமக்கள், அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்தச்சம்பவத்தால் வேளச்சேரியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா வலியுறுத்தியிருந்தார்.

Advertisment

இந்நிலையில், ஸ்கூட்டரில் தூக்கிச் செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்ததாக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார். இதற்கிடையே வேளச்சேரி தொகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்ற வாக்குச்சாவடி எண் 92ல் வரும் 17ம் தேதி மறுதேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisment