Advertisment

நாளை மறுநாள் எங்கெல்லாம் மறுவாக்குப்பதிவு...? 

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இருகட்டங்களாக அறிவிக்கப்பட்டு நேற்று முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், நாளை மறுதினம் 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கானஇரண்டாவது கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. இந்நிலையில் தமிழகத்தில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக மறுவாக்குபதிவுநடைபெறும் இடங்கள் என்னென்ன என்று மாநில தேர்தல் ஆணையம்அறிவித்துள்ளது.

Advertisment

 re poll in tamilnadu local election

அதன்படி திருவள்ளூர் கடம்பத்தூர் ஒன்றியம் பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. தூத்துக்குடியில் நெடுங்குளம் ஊராட்சியின் 1-வது வார்டில் நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதேபோல் நாகை சீர்காழி அருகே கூழையூர் கிராமத்தில் இருபதாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு முப்பதாம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. புதுக்கோட்டையில் விராலிமலை பதினைந்தாவது வார்டுக்கு உட்பட்ட 13 வாக்குச்சாவடிகளில் நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Advertisment

தஞ்சையில் செம்மங்குடி ஊராட்சியில் 8 மற்றும் 9 வது வார்டுகளில் நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. மதுரையில் கொட்டாம்பட்டி ஊராட்சியில் சென்னகரம்பட்டி கிராமம் எட்டாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. கிருஷ்ணகிரியில் ஊத்தங்கரை ஒன்றியம் 21ஆம் வார்டில் நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வாக்குப் பெட்டிக்குதீ வைப்பு மற்றும் வாக்குச் சீட்டில் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தமிழகத்தில் இந்த இடங்களில் நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

local election Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe