தமிழகத்தில் நேற்று முன்தினம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலின்போது சில இடங்களில் வாக்குப்பதிவில் குளறுபடி நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து இந்த புகார்கள் தொடர்பாக, தேர்தல் ஆணையம் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் அறிக்கை ஒன்றைக் கேட்டுப்பெற்று, அந்த அறிக்கையின் அடிப்படையில், சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள 5 வார்டுகளில் 7 வாக்குச் சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதன்படி இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
சென்னை, வண்ணாரப்பேட்டை 51வது வார்டில் நடைபெறும் மறுவாக்குப்பதிவு வாக்குச் சாவடிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல், பெசண்ட்நகர் ஓடைகுப்பம் 179வது வார்டுக்கான மறுவாக்குப்பதிவு அப்பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் நடைபெற்று வருகிறது.
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-02/th-0_2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-02/th-9_3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-02/th-3_43.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-02/th-7_7.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-02/th-5_25.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-02/th-6_10.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-02/th-2_54.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-02/th-1_67.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-02/th_66.jpg)