Advertisment

மீண்டும் திறக்கப்பட்ட ரயில்வே கேட்... சுரங்கப்பாதை என்னவானது ?

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி நகரம் - நியூடவுன் என்கிற இரண்டு பகுதிகளை இணைக்கும் இடத்தில் எல்.சி 81 ரயில்வே கேட் அமைந்துள்ளது. இதன் வழியாக தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் இரவு – பகல் என சென்று வருவதால் அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படும். இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

Advertisment

Re-opened railway gate ... what's the subway?

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இதனையடுத்து இரண்டு பகுதி மக்களும், மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ, எம்.பி இருவரிடமும், இந்த ரயில்வே கேட் அமைந்துள்ள பகுதியில் இரயில்வே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனை அதிமுக எம்.பியான செங்குட்டுவன், எம்.எல்.ஏவும், மந்திரியாகவும் உள்ள நிலோபர் கபில் இருவரும் கண்டுக்கொள்ளவில்லை.

Advertisment

சமூக ஆர்வலர்கள் இதுப்பற்றி மத்திய – மாநில அரசுகளின் கவனத்துக்கு புகாராக, கோரிக்கையாக கொண்டு சென்றதன் விளைவாக மத்திய, மாநில அரசுகள் மூலம்சுமார் ரூ.18 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க உத்தரவிட்டது. அப்பணிகள் தொடங்குவதற்காக கூறி கடந்த ஆண்டு 2017 செப்டம்பர் 11 ஆம் தேதி ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது.

Re-opened railway gate ... what's the subway?

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இதனால் வாகன ஓட்டிகள் நியூடவுன் பகுதிக்கு செல்லவும், வாணியம்பாடி நகரத்திற்குகள் வர கோனாமேடு தரைப்பாலம், புதூர் மேம்பாலம் என சுமார் 4 கி.மீ தூரம் சுற்றி வந்துக்கொண்டு இருந்தனர். இதனால் இவ்வழியாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் ரயில்வே கேட் நிரந்தரமாக மூடி ஒரு ஆண்டிற்கும் மேலாகியும் சுரங்கபாதை அமைக்கும் ஒப்பந்ததாரர் இப்பணிகளை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்ததால் பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

சமுக ஆர்வலர் மதுரை பாரூக் அஹமத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் மூடப்பட்டதால், பணிகள் நடைபெறாததால் மக்கள் படும் துன்பங்கள் குறித்து மனுதாக்கால் செய்தார். அதி்ல்மூடப்பட்ட கேட்டை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்ககோரி குறிப்பிட்டுயிருந்தார். இவ்வழக்கு விசாரணை கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இரயில்வே துறை சார்பில் சரியான விளக்கம் தராததால், பொதுமக்கள் அதிகளவு பதிப்புக்குள்ளவதால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ரயில்வே கேட் மீண்டும் திறக்க உத்தரவு பிறப்பித்தார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் ரயில்வே அதிகாரிகள் சுரங்கபாதை அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களை மண்ணால் மூடினர். மேலும் டிசம்பர் 3ந்தேதி மாலை வாணியம்பாடி ரயில் நிலைய அதிகாரிகள் சேகர், பூபதி ஆகியோர் முன்னிலையில் இலகுரக வாகனங்களான கார், ஆட்டோ, பைக் மற்றும் ஆம்புலன்ஸ் மட்டும் சென்று வர கூடிய வகையில் நியூடவுன் ரயில்வே கேட் மீண்டும் திறக்கப்பட்டது. இனி ரயில்கள் வரும்போது கேட் மூடப்பட்டு மக்கள் காத்திருக்கும் நிலையும் வரும்.

சுரங்கபாதை வேலையை வேகமாக தொடங்கி முடிக்க கூறி போராட்டம் நடத்தியிருந்தாலோ, நீதிமன்றத்தை அணுகியிருந்தாலோ ஒரு தீர்வு கிடைத்துயிருக்கும். அதைவிட்டுவிட்டு கேட் திறந்துவிடுங்கள் என கேட்டதன் விளைவு கேட்டை திறந்துவிட்டுவிட்டார்கள், சுரங்கப்பாதை பணி ?, ரயில்கள் போகும்போதுயெல்லாம் மீண்டும் பழையப்படி காத்திருக்க வேண்டியது தான்.

reopen Gateway railway
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe