re-count the votes cast in the Thadagam panchayat president election

கடந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில்கோவை மாவட்டம் சின்னதடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கு திமுக ஆதரவில் சுதா என்பவரும்அதிமுக ஆதரவில் சௌந்தரவடிவு என்பவரும்போட்டியிட்டனர். இதையடுத்துசுதா 2,553 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த சில நிமிடங்களில் சௌந்தரவடிவுசுதாவை விட மூன்று வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாகஅறிவிக்கப்பட்டது.

Advertisment

இதை எதிர்த்து சுதா கோவை மாவட்ட முதன்மைநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், சின்னதடாகம் ஊராட்சி தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை மறுவாக்கு எண்ணிக்கைநடத்த கோவை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும்மறுவாக்கு எண்ணிக்கை முழுவதும் ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்றும், பிறகு அந்த ஆவணத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Advertisment