Advertisment

இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவராக மீண்டும் தேர்வு - கே.எம்.காதர் மொகிதீனுக்கு ஸ்டாலின் வாழ்த்து

kathar

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி: ’’இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், தலைவர் கலைஞர் சார்பிலும் எனது இதயம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisment

நாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாக்க வேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தில் இந்திய அரசியல் பயணித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இருக்க வேண்டும் என்ற கொள்கை உறுதி கொண்ட பேராசிரியர் திரு. காதர் மொகிதீன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பது, மிகப்பொருத்தமான நிகழ்வு. பேராசிரியர் அவர்களின் பணிகள் மென்மேலும் சிறந்து, மேலும் பல வெற்றிகளை அவர் பெறவேண்டும் என்று மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன்.’’

Advertisment
KM Gadhar Leader League MLA Mokhtin stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe