Advertisment

ஆர்.டி.ஓ விசாரணை... தாமதமாகும் சின்னத்திரை நடிகை சித்ராவின் பிரேதப் பரிசோதனை!

RDO investigation ... actress Chitra case

Advertisment

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில், முல்லை வேடத்தில் நடித்துப் பிரபலமானவர் நடிகை சித்ரா. 28 வயதான இவர், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பின்னர், சின்னத்திரை நடிகையாகப் புகழ்பெற்றார். இந்நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற தகவல் வெளியான நிலையில், தனியார் ஹோட்டலில் இருந்து மீட்கப்பட்ட அவரது உடல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

RDO investigation ... actress Chitra case

தற்பொழுதுவரைமருத்துவமனைக்கு வெளியே,சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் குவிந்துள்ளனர். இதனால், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.சித்ராவுக்குநான்கு மாதங்களுக்கு முன்பே, தொழிலதிபர் ஹேம்நாத்என்பவருடன் நிச்சயதார்த்தம் ஆனநிலையில், கடந்தஇரண்டு மாதங்களுக்கு முன்பு பதிவுத் திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. பதிவுத் திருமணத்திற்குப் பின், இந்தச் சம்பவம்நடந்திருப்பதால், இதற்கு வரதட்சணை கொடுமைகாரணமாகஇருக்குமாஎன்பது பற்றி விசாரிக்கஆர்.டி.ஓ லாவண்யா,தற்பொழுது நேரில் வந்துள்ளார். அவர் விசாரித்துக் கையொப்பமிட்ட பிறகே, சித்ராவின்உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். இதனால், பிரேதப் பரிசோதனையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Actress television 'Chitra Devi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe