Advertisment

“ஆர்.பி.ஐ. நகைக்கடன் விதிமுறைகள் தமிழக கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது” - அமைச்சர் பெரியகருப்பன்

RBI Jewelry Loan Regulations Not Applicable to TNCooperative Banks

புதிய நடைமுறையில், “தங்க நகையின் மதிப்பில் 75% தொகை மட்டுமே கடன் வழங்கப்படும். அடமானம் வைக்கப்படும் நகைகளுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். வங்கிகள் (அ) வங்கியல்லா நிதி நிறுவனங்கள் தங்கத்திற்கான தூய்மை சான்றிதழை வழங்க வேண்டும். தங்க ஆபரணங்கள் மற்றும் வங்கிகளில் வாங்கிய தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் பெற முடியும். வெள்ளிப் பொருட்களுக்கும் கடன் வழங்க அனுமதிக்கப்படுகிறது.

ஒரு கிலோவுக்கு குறைவாக உள்ள நகைகளுக்கு மட்டுமே கடன் வழங்க அனுமதிக்கப்படும். அடகு வைக்கப்படும் நகைகள் 22 காரட் தங்கத்தின் விலையில் மட்டுமே மதிப்பிடப்படும். கடன் ஒப்பந்தத்தில் முழுமையான விவரங்கள் இருக்க வேண்டும். அடகு வைக்கப்பட்ட தங்கத்திற்கான முழு தொகையையும் வாடிக்கையாளர்கள் செலுத்திய 7 நாட்களுக்குள் நகைகளை திருப்பித் தரவேண்டும். தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குபவர்கள் 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.

ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களே பெரும்பாலும் தங்களது அவசர தேவைகளுக்கு தங்க நகைக் கடன் போன்றவற்றைச் சார்ந்திருக்கும் சூழலில் அதன் மீது மத்திய ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறைகள் சாமானிய மக்களை பாதிக்கும் செயல் என்று திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் ரிசர்வ் வங்கியின் புதிய நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், நகைக்கடன் குறித்த ரிசர்வ் வங்கி விதிகள் தொடக்க வேளாண் வங்கிகளுக்கு பொருந்தாது. ரிசர்வ் வங்கி விதிகளால் கூட்டுறவு வங்கிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.60 ஆயிரம் கோடி நகை கடன் தரப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

minister periyakaruppan RBI
இதையும் படியுங்கள்
Subscribe