முன்பே சொன்ன நக்கீரன்... காங்கிரஸில் இருந்து விலகுவதாக ராயபுரம் மனோ அறிக்கை!

"திமுகவா? பாமகவா? காங்கிரஸிலிருந்து விலக ராயபுரம் மனோ முடிவு!" என்ற தலைப்பில் முன்பே நக்கீரன் கட்டுரை வெளியிட்டிருந்தது. அதில் ராயபுரம் மனோ காங்கிரஸிலிருந்து விலகுவதை அழுத்தமாக பதிவு செய்திருந்தது.

mano satement

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக ராயபுரம் மனோ அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். அதில், " தொடர்ந்து 30 ஆண்டு காலமாக நேரு குடும்பத்திற்கு விசுவாசமாக, உணர்வுபூர்வமாக, மனநிறைவுடன் பணியாற்றினேன். எனக்கு சிறிது காலம் ஓய்வு தேவைப்படுகிற காரணத்தினால் காங்கிரஸில் இருந்து விலகி பார்வையாளராக செயல்பட ஆசைப்படுகிறேன். காங்கிரஸில் மனநிறைவோடு பணியாற்றினேன். இன்று மனநிறைவோடு விடை பெறுகின்றேன்" என்று தெரிவித்துள்ளார். மேலும்,''காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுகிறேன். ஆனால், என் மக்கள் நலப் பணி தொடரும்...'' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

congress leaves from party rayapuram
இதையும் படியுங்கள்
Subscribe